
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான கதவு பழுதடைந்துள்ளதை தொடர்ந்து புதிதாக தங்க கதவு அமைக்க தேவ பிரசன்னம் முடிவு செய்தது.

அதன்படி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 4 கிலோ தங்கம் மூலம் புதிய கதவு செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்குமுன் தங்க கதவு கோட்டயம் இடப்பள்ளி ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் வைத்து நடிகர் ஜெயராம் தங்க கதவை தரிசனம் செய்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதில் கலந்து கொண்டார்.
Patrikai.com official YouTube Channel