சென்னை: தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மாதம் இறுதியில் சரவன் ரூ.60ஆயிரத்தை நெருங்கிய நிலையில், கடந்த வாரம் படிப்படியாக குறைந்துமீண்டும் சரவன் ரூ.56000ஐ எட்டியது. இதனால் சாமானிய மக்கள் பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
பழைய குருடி கதவை திருடி என்ற பழமொழிக்கு ஏற்ப தங்கத்தின் விலை குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்கிறது. இன்று சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ர்ந்துள்ளது. கடந்த 4 தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது.
நேற்று ரூ.57,160க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.7,145க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து ரூ.7,225க்கு விற்பனையாகிறது.
இன்று ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கத்தின் விலை 67,800க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,840-க்கும், ஒரு கிராம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம், கடந்த நான்கு னங்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.101க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை ஏற்றம் இறக்கத்திற்கு உலக சந்தை காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானதும், அதற்கு மறுநாள் (7-ந் தேதி) தடாலடியாக சவரனுக்கு ரூ.1,320 சரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் ரூ.56000ஐ எட்டிய நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
பல நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலக பொருளாதாரம் நிலைகுலைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை, கட்டுக்குள் இல்லாமல் ஏறி இறங்கி வருவதாகவும், அதன்விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.