தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து சவரன் ரூ. 90,400க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 11,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில் புதன்கிழமை, தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது — ஒரு அவுன்ஸ் $4,000-ஐ தாண்டியது.
தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக முதலீட்டாளர்கள் தேர்வு செய்வதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உலக அரசியல் மற்றும் உக்ரைன் மற்றும் காசா போர்கள், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவை தங்கத்திற்கான தேவை அதிகரிக்க காரணமாகியுள்ளது.
அமெரிக்க அரசின் தடைகள் மற்றும் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவது ஆகியவை டாலரை பலவீனப்படுத்தி தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது.
வட்டி விகிதங்களை விரைவாகக் குறைக்காததால் பெடரல் ரிசர்வ் வங்கி மீதான டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக சந்தையில் நம்பிக்கை குறைந்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.
டிரம்பின் வரி கொள்கைகள் மீதான சந்தேகம் முதலீட்டாளர்களை தங்கத்திற்குத் தள்ளியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன.
ஆனால் நகை வாங்குபவர்கள் குறைந்துள்ளனர், விலை அதிகரிப்பால் பொதுமக்களின் நகை வாங்குதல் குறைந்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தாலும், முதலீட்டாளர்கள் ETF (முதலீட்டு நிதிகள்) வழியாக தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
தங்கம் மட்டுமன்றி பிட்காயின் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளும் உயர் நிலைக்கு சென்றுள்ளன.
பிட்காயின் – $126,000 என்ற புதிய உச்சம் அடைந்துள்ளது, பங்கு சந்தை – நியூயார்க், லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்களில் பங்குகள் புதிய உச்சங்களை எட்டியுள்ளது.
உலகளாவிய அரசியல் குழப்பம், டாலர் பலவீனம், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தேவை ஆகியவை தங்கத்தின் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.