சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்த்து வரும் நிலையில், ஆடி முதல்நாளான இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.720 வரை உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிக்காற்றில் அம்மிகூட பறக்கும் என்ற பழமொழிக்கேற்ப, தங்கத்தின் விலை உச்சத்தில் பறந்துகொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி cள்ளது. ஆடி முதல் நாளான இன்று (புதன்கிழமை – ஜூலை 17) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்குத்துடன் காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,830-க்கும், ஒரு பவுன் ரூ.360 அதிகரித்து ரூ.54,640-க்கும் விற்பனையானது.
இன்று பவுனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. ஆடி முதல் நாளான புதன்கிழமை(ஜூலை 17) மீண்டும் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கு விற்பனையாகிறது.
அதன்படி, இன்று ( ஜூலை 17) கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.6,920-க்கும், ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும், செவ்வாய்க்கிழமை 20 காசு குறைந்து ரூ.99.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.99,500-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனையாகிறது.