சென்னை:

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் 30ஆயிரத்துக்கு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் பொருளாதார கொள்கை காரணமாகவே, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு, நிதி அறிக்கையில்,  தங்கத்தின் மீதான  இறக்குமதி வரி 10% லிருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் உலகளா விய பொருளதார தேக்கம், டாலருக்கு எதிரான  இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக  தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  ஏறி வருகிறது.

இன்று (செப்.4) புதிய உச்சமாக 22 காரட் தங்கம் சவரன் ரூ.30120 ஆக உள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.3765 ஆகவும் உள்ளது.

அதுபோல 24 காரட் தங்கம்  ஒரு கிராம் 3922 ரூபாய் ஆகவும், சவரன் ரூ.31376 ஆகவும் உள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சம் பெற்றுள்ளது சாமானிய மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.