ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ராஜ்கோட் பகுதி பொற்கொல்லர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மெற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது உலக அளவிலான ஒருநாள் பாதிப்பில் உச்சக்கட்டம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வமின்மை காரணமாக, இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பபட்டு உள்ளது.
குஜராத் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வமின்மை காணப்படுகிறது. சமீபத்தில், ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த 50 கிராம மக்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்திய சுகாதாரத்துறையினரை விரட்டியடித்தனர். தங்களுக்கு உடலில் எந்த குறையும் இல்லாதபோது எதற்கு தடுப்பூசி எனவும் கேள்வி எழுப்பினர். கொரோனா தங்களை அண்டக்கூடாது என உள்ளூர் தெய்வத்திற்கு நாங்கள் படையில் போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதாகவும், அவரது ஆசியால் எங்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் கூறி வருகின்றனர்.
இநத் நிலையில், ராஜ்கோட்டில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக, அங்குள்ள பொற்கொல்லர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவசமாக தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்ம பெண்களுக்கு தங்கமூக்குத்தி வழங்கி வருகின்றனர். ஆண்களுக்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு சமையலறை பொருட்களை கருவிகளையும்இலவசமாக வழங்கி வருகின்றனர். இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் ஏற்கனவே வைரஸ் பட்டை தீட்டும் தொழிலில் முன்னோடியாக இருந்து வரும் நிலையில், ராஜ்கோட்டில் பொற்கொல்லர்களின் தங்க நகை தயாரிக்கும் தொழிலும் பிரதான தொழிலாக உள்ளது. அங்கு ஆயிரக் கணக்கானோர் தங்க நகை தயாரிப்பை குடிசை தொழிலாகவே அதனை செய்து வருகின்றனர். இவர்களின் சங்கத்தின் சார்பில், பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க தங்கமூக்குத்தியை இலவசமாக வழங்கி வருகின்றனர்.