திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை தவிர்க்க தெருநாய்களை சுட்டுக்கொல்லும் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தங்கக்காசு பரிசளித்து ஊக்க்ப்படுத்த கேரளாவின் ஒரு பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

st_dogs

புனித தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் இதற்கெனெ துப்பாக்கிகளை பஞ்சாயத்துகளுக்கு மவிவு விலையில் விநியோகிக்கவிருக்கிறது. எங்களுக்கு மக்களின் பாதுகாப்பே பிரதானம் எனவே தெருக்களில் வெறிபிடித்து அலையும் எவ்வளவு தெருநாய்களை சுட்டுத்தள்ளுகிறீர்களோ அவ்வளவு பரிசுகள் அள்ளித்தரப்படும் என்று முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜேம்ஸ் பம்பைக்கல் அறிவித்துள்ளார்.
அரசு தெருநாய்கள் பிரச்சனை குறித்து மெத்தனமாக இருந்துவரும் சூழலில் நமது பாதுகாப்புக்கு நாமேதான் களத்தில் இறங்க வேண்டியதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி ராகவன் என்ற 90 வயது முதியவர் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அரசின் புள்ளிவிபரப்படி கடந்த 4 மாதங்களில் 4 பேரி தெருநாய் கடிக்கு உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் தெருநாய்கள் 175 குழந்தைகள் உட்பட 701 பேரை கடித்திருக்கின்றது. இந்த ஆண்டு மட்டும் 53,000 பேர் நாய் கடிக்காக அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கேரளாஅவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 88,172 பேரும், 2014 ஆம் ஆண்டில் 1,19,119 பேரும், 2015 ஆம் ஆண்டில் 47,156 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.