புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் பாஜகவினர் மோடி படத்துடன் கூடிய தங்கக்காயன் வாக்காளர்களுக்கு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது, மோடி படத்துடன் 149 தங்க காசுகள் ரூ.90 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு சக்கர வாகனத்தில் இந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேரும் பைக்கை போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க காரைக்கால் தேர்தல் அதிகாரி அர்ஜுன் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் ஆணையம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]