‘கோல்டு கார்டு’ விற்பனை : அமோக சாதனையை படைக்கும்… அமைச்சரவைக் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்த அதிபர் டிரம்ப்… 1M கார்டுகள் விற்றால் $5 டிரில்லியன் வருமானம்…
“தங்க அட்டை” விசாவை அறிமுகப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
$5 மில்லியனுக்கு (சுமார் ரூ. 43 கோடி) விற்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கோல்டன் விசா பணக்கார முதலீட்டாளர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான பாதையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து புதன்கிழமை தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த புதிய திட்டம் “அமோக விற்பனையை ஏற்படுத்தும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கான 35 ஆண்டுகால விசா திட்டத்தை மாற்றும் “தங்க அட்டைகள்”, கிரீன் கார்டுகளைப் போலவே செயல்படும், ஆனால் “உயர் மட்ட” நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று டிரம்ப் மேலும் விளக்கினார்.
இந்தத் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயை நாட்டின் கடனை அடைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தலாம் என்று டிரம்ப் பரிந்துரைத்தார்.
“ஒரு மில்லியன் கார்டுகள் விற்றால், $5 டிரில்லியன் டாலர்கள் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்க விசாவுக்கான தேவை மற்றும் தாகம் அதிகரித்திருப்பதை அடுத்து இது நிறைய விற்பனையாகும் என்று நினைக்கிறன் என அவர் பேசினார்.