சென்னை:
பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளர். இவருக்கு ரத்த அழுத்தமும், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் பூரண குணமடைந்ததை அடுத்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி அவருக்கு பழக்கூடை கொடுத்து அந்த மூதாட்டியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Patrikai.com official YouTube Channel