சிலுவாப்பூர், உ. பி.
பசியுடன் இருந்த ஒரு ஆடு தன் உரிமையாளர் வைத்திருந்த ரூ. 66000 பெருமானமுள்ள ரூபாய் நோட்டுக்களை தின்று தீர்த்தது.
கனோஜ் மாவட்டத்தில் உள்ள சிலுவாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார் பை.
அவர் தன் வீட்டில் ஒரு ஆட்டை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார்.
அவரும் அவரி வீட்டாரும் அந்த ஆட்டைக் குழந்தை போல் பாவித்து வந்ததால் அந்த ஆடு வீடெங்கும் சுதந்திரமாக சுற்றித் திரியும்.
சர்வேஷ் அவரது வீட்டில் சில பராமரிப்பு வேலைகளை செய்து வருகிறார்,
அதற்கு செங்கற்கள் வாங்குவதற்காக ரூ. 66000/- தனது ட்ரவுசர் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக வைத்திருந்தார்.
குளித்து விட்டு செங்கல் வாங்கலாம் என எண்ணி குளிக்க சென்றார்
ஆடு பசியினாலோ, அல்லது இது ஏதோ புதுவகை தின்பண்டம் என நினைத்தோ அந்த ரூபாய் நோட்டுக்களை மென்று தின்ன ஆரம்பித்தது.
குளித்து விட்டு வந்து பார்த்த சர்வேஷ் ஆடு ரூபாய்களை தின்று விட்டதை கண்டு, அதன் வாயிலிருந்து இரண்டு நோட்டுக்களை மீட்டார்.
அந்த இரண்டு நோட்டுகளும் கிழிந்து நனைந்து உபயோகமின்றி போய் விட்டது.
சிலர் அந்த ஆட்டை கால்நடை மருத்தவரிடம் கொண்டு சென்று, வயிற்றில் இருக்கும் பணத்தை மீட்கலாம் என்றும் வேறு சிலர் ஆடு இது போல் செய்வது அபசகுனம் என்பதால் அதை விற்றுவிட வேண்டும் என சொல்லியதாகவும் சர்வேஷ் தெரிவித்தார்.
இதைப் பற்றி அவரும், அவர் மனைவியும் கூறுகையில் தாங்கள் அதற்காக அந்த ஆட்டை வெறுக்கவில்லை என்றும், அது ஒரு சேட்டை மிகுந்த குழந்தை எனவும் சிரித்த வண்ணம் கூறினார்கள்.
இந்த செய்தி அக்கம்பக்கத்தில் பரவ, அந்த ஆட்டைக் காண பலரும் கூடி விட்டனர்.
செல்ஃபீ மோகம் கொண்ட சிலர் அந்த ஆட்டுடன் விதம் விதமாக செல்ஃபீ எடுத்து மகிழ்ந்தனர்.