டெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவா, பஞ்சாப் மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன.

ஏற்கனவே 7 மாநிலங்கள் ஊரட்ங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு வலியுறுத்தி உள்ள நிலையில், அந்த மாநிலங்களும் கோவா, பஞ்சாப் மாநிலங்களை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு திகழ்ந்துள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து மாநில முஸ்லிம்களும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மேலும் நீட்டிக்க கோரி, தெலுங்கானா,  மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரேதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

மத்தியஅரசு இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கோவா, பஞ்சாப் மாநிலங்கள்,  ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன. இதைத்தொடர்ந்து மேலும் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கும் வாய்ப்ப உள்ளதாக கூறப்படுகிறது.