அட்வான்ஸாக பெரும் பணம் வாங்கிவிட்டு, எங்களுக்கு படம் இயக்கி தராமல் தெலுங்குப் படம் இயக்குகிறார் என இயக்குனர் லிங்குசாமி மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து லிங்குசாமி அடுத்தடுத்த இயக்கிய படம் தோல்வியில் முடிய தமிழில் அடுத்தப்பட வாய்ப்பு சிக்கலாக தெலுங்கில் ராம் பொத்னியேனியை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டார்.

நேற்றுதான், ‘படத்தின் இறுதி கதையை கேட்டேன். லிங்குசாமி சார் ஐ லவ் யூ. சூப்பர் டூப்பர்’ என்று ராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வாங்கிய அட்வான்சுக்கு எங்களுக்கு முதலில் படம் பண்ணித்தர வேண்டும். அதுவரை லிங்குசாமி படம் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என பல இடங்களில் புகார் தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா.

ஞானவேல்ராஜா எங்கள் சங்கத்து உறுப்பினர் கிடையாது. அதனால், நாங்கள் லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது என தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஷின் தலைவர் கூறியுள்ளார் .