நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசோக்குமார் குறித்தும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் ஞானவேல்ராஜா வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து, ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீது பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

பைனான்சியர் போத்ரா இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

[youtube-feed feed=1]