சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
DeepSeek AI சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கான “விழிப்புணர்வு அழைப்பு” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த AIக்கு அதிகரித்து வரும் மவுசை அடுத்து உலகளவில் தொழில்நுட்ப பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், அமெரிக்க பங்குச் சந்தை மட்டுமன்றி, டோக்கியோ, ஆம்ஸ்டர்டாம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி காணப்பட்டது.
சீன ஸ்டார்ட்-அப் DeepSeek கடந்த வாரம் அறிமுகப்படுத்திய இலவச AI டிரம்ப் பதவியேற்பு வைபவத்தால் ஆரம்பத்தில் அதிகளவு பேசப்படவில்லை.
இருப்பினும், வார இறுதியில், OpenAI இன் ChatGPT ஐ விட ஆப்பிளின் அமெரிக்க ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக சீன சாட்பாட் உயர்ந்தது.
தற்போது கிடைக்கும் சேவைகளின் விலையில் ஒரு பகுதியிலேயே குறைவான தரவைப் பயன்படுத்துவதை அடுத்து இது உலகளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ஜனவரி 27ம் தேதி அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் 3 சதவீதம் சரிந்ததை அடுத்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.