டெல்லி:

ர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாகவும், இது 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்து உள்ளார். இந்த வீழ்ச்சி கொரோனா தொற்றால் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமையேற்றதில் இருந்தே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, உலக நாடுகளுக்கு இடையே போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்க இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளதாகவும், இது 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதற்காக 4 அம்ச திட்டங்கள் அறிமுகப்பபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

1) போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்வது
2) வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு
3) கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைப்பது
4)  சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை

இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.