சென்னை:
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜி.கே.வாசன் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் இன்று வேட்புமனு தாக்கcல் செய்தனர். முதல்வர் எடப்பாடி முன்னிலையில், சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 3 இடங்கள் திமுகவும், 3 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் 3 பேர் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.
இன்று அதிமுக சார்பில் போட்டியிடும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அதிமுக வேட்பாளர்கள் கேபி முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள 6 பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.