பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வி.என். வேணுகோபால் போட்டியிடுவதாகவும் ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.