“செவாலியே…. யே யே….” என்ற தலைப்பில்  பாலா(Bala Salem ) அவர்கள் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:

 சிவாஜி பயங்கரமா நடிப்பாரு, செம்ம நடிகரு, அழுதார்ன்னா அப்படியே நமக்கு அழுகை வந்துரும், இவ்ளோ ஏன் ? அவர் நடிப்பதை பார்த்தால் டீபி, மூலம், சர்க்கரை நோயெல்லாம் குணமாகும், என்றெல்லாம் பேசிப்பேசியே சிவாஜி எனும் நடிகனின் இயல்பான நடிப்பை கொன்றவர்கள்தான் நம்ம மக்கள்…!
பராசக்தியில் இருந்து, மோட்டார் சுந்தரம்பிள்ளை வரை பார்த்த சிவாஜி, அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு template க்குள் அடங்கிப்போனார் ! அதாவது, “நாயே.. நான் நடிப்பதுதான் நடிப்பு… நீ பார்த்துதான் ஆகனும்” என்பதுபோல !
அதற்கு தகுந்தார்போல சக நடிகரான எம்ஜிஆர் மாவு பிசைவதிலேயே கவனம் செலுத்த, நடிகர்ன்னா அது சிவாஜிதாண்டா என்கிற நிலை வந்துவிட்டது.

கமல் - சிவாஜி
கமல் – சிவாஜி

மனதுக்குள், “சிவாஜி ஏன் வாங்கின காசுக்கு மேல கூவுறாரு” என்றெல்லாம் தோன்றினாலும், அதை வெளியே சொல்ல முடியாது, உடனே நம்மாட்கள்.. “இவன் ஒரு ரசனைகெட்ட நாதாரி” என்பார்கள்… அதனால் கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டிய சூழலில் நாம் எல்லோருமே நடிப்பென்றால் ஜிவாஜிதான் என்கிற மைண்ட் செட்டுக்கு வந்துவிட்டோம்….
ஒரு கட்டத்தில் அவரை அவர் இழக்க தொடங்கிவிட்டார், குறிப்பாக கடைசி காலப்படங்களில், மஞ்சுளா, ஸ்ரீப்ரியா வகையறாக்கள் ஹீரோயினாக நடிக்க, பருத்த தொப்பையை இறுக்கி கட்டி, கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு, தெய்வமகன் மேனரிசத்தை கொண்டுவர முயன்று தோற்பார்..! அதுவும் அந்த நகத்தை கடித்துக்கொண்டே ரொமாண்டிக் லுக் விடும்போது… நமக்கு வகுத்தாலையே போகும்..! :'(
இப்போது உள்ள கிழட்டு ஹீரோக்களுக்கு சமவயது அப்பாவாக வலம்வரும் விஜயகுமார் போல, அப்போது மேஜர் சுந்தரராஜன் இருந்தார், ஒரு படம் பார்த்தேன் பெயர் நினைவில்லை. அதில், கரப்பான்பூச்சியை பார்த்து பயந்த சிவாஜி, சுந்தரராஜன் முதுகுக்கு பின்னால் ஒளிந்துக்கொள்வார், சுந்தரராஜன் உருவத்தை தாண்டி நம்ம நடிகர் திலகத்தோட தொப்பை வெளியே தெரியும்..!
சுந்தரராஜன் பயந்த சிவாஜியை தேற்றுவார் பாருங்க..! அவ்வ்வ்வ்சம்…! :'( குடித்த தண்ணீரை துப்பிவிட்டு சிரித்தேன், “சூப்பர் படம்டா.. அந்த காலத்துல” என்று அளந்த அம்மாவை முறைத்தேன், முகத்தை வேறுபுறமாக திருப்பிக்கொண்டு, “அந்த ரிமோட்ட்டு இங்கதான் எங்கயோ வெச்சேன் ” என்று இழுத்தார்.
ஓகே… இந்த பதிவில் முதல் இரண்டு பாராக்களை எடுத்து, சிவாஜிக்கு பதில் அங்கு கமலை பொருத்திப்பாருங்களேன். அப்படியே செட் ஆகும். கமலும் இதையேதான் செய்ய ஆரம்பித்திருக்கிறார், சமீபகால படங்களில், முதிர்ச்சியை மறைக்க, அவர் படும் பாடு பெரிதாக தெரிகிறது. ரொமாண்டிக் சீக்வன்ஸ்ல எல்லாம் இளமையை நிரூபிக்க படாதபாடு படுகிறார்..
ஒரு விஷயம் கவனித்தீர்களா ? “கமல் படம்” என்றால் எந்த நிபந்தனைகளும் இல்லாமல், எல்லா ரசிகர்களும் தியேட்டரில் பார்ப்பார்கள்..! தற்சமயம் அந்த உணர்வுக்கு பதில் ஒருவித சலிப்பு வருகிறது, உண்டா இல்லையா ? அதிலும் “உத்தம வில்லன், மன்மதன் அம்பு, போன்ற படங்கள் கொடூர ரகம், இடையில் ஆறுதலாக பாபநாசம் படத்தை மட்டும் கொடுத்தார்…!
ஒரு சராசரி ரசிகனாக, என் ஆசை, சலங்கை ஒலியில் பார்த்த கமலை மீண்டும் பார்க்கவேண்டும். இப்பொழுதுள்ள வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில்..! 🙂
தொலைந்து போன சிவாஜியை, முதல் மரியாதையில் பாரதிராஜா மீட்டார், அதே போல, தொலைந்துக்கொண்டிருக்கும் கமலையும் யாராவது மீட்க வேண்டும்…!
மத்தபடி நானும் ஐ லவ் கமல்ங்க… செவாலியே விருதுக்கு பெருமைப்படுறேங்க…!!! 🙂