சென்னை:

த்தியஅரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவர்  ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் நேற்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாப்படி, இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம் சார்ந்தோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது என்றும்,  இந்த மதங்களைச் சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சுமார் லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்… அவர்களுக்கும் மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.