ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாகப் புவி வட்ட பாதையில் இன்றுவிண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நாட்டின் சொந்த தேவைகளுக்காக மட்டுமின்றி, வணிக ரீதியாகவும்செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலமாக செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவதுஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 08 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான, ஜிசாட்-6ஏ இன்றுமாலை 4.56-க்கு விண்ணில் ஏவப்பட்டது. பிறகு, ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள் தொலைத் தொடர்பு சேவைக்கு மிகவும் உதவிகரமாகஇருக்கும். இதன் ஆயுட்காலம் பத்து வருடங்கள் ஆகும்.
இது இந்தியாவின் 12- ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். முன்னதாக, ஜிசாட் 6 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் 2015 ஆகஸ்ட் 27-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.