க்ரா

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட முயற்சித்த அந்நபரை அருகே இருந்த மக்கள் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 18ம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  சிறுமியை பலாத்காரம் செய்து கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நாடகமாடி ஏமாற்ற முயற்சிக்க, பரிசோதனையில் அவருக்கு மனநில குறைபாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த பவித்ரா என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆக்ரா காவல் ஆணையரகம், தனது எக்ஸ் வலைதளத்தில், இந்த சம்பவம் ஜெகதீஷ்புரா பகுதியில் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பக்தி நிறைந்த பாஜக ஆளும் மாநிலத்தில் கோவிலுக்குள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது இந்த பகுதி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது/