பெங்களூரு:

டந்த வருடம் போலவே இந்த வருடமும்  பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரிகேட் ரோடு, எம்.ஜி. சாலை ஆகிய பகுதிகளில் இளஞர்கள் மற்றும் யுவதிகள் புது வருடத்தை வரவேற்று உற்சாகமாக ஆடிப்பாடினர். அப்போது கூட்டத்திற்குள் சில இளைஞர்கள் இளம் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்ததாக  புகார் எழுந்தது.

கடந்த வருட சம்பவம்

இது பெரும் சர்சசையை ஏற்படுத்தியது. இனி இவ்வாறு நடக்காத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

அத போல இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட நேரத்தில் பெங்களூருவில்  1500 ஆண்  காவலர்கள் மற்றும் 500 பெண் காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் இதனையும் மீறி சில இளைஞர்கள் மது  போதையில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.  இது குறித்த வீடியோவும் வெளியானது. இளம் தம்பதிகளிடம்  ஒரு மர்மகும்பல் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர்  எந்த நடவடிக்கையும், என்றும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையாளர், “இந்த வருடம் நகரின் முக்கிய இடங்கள் சிசிடிவி. கேமிராக்கள், டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.  தவிர காவலர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆகவே பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட  சம்பவம் ஏதும் நடக்கவில்லை. இது போன்ற எந்த புகாரும் வரவில்லை” என்றார்.