செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில்
16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சியிலுள்ள மிகப்பெரிய கோவிலாகும். செஞ்சி கோட்டையில் அமைந்துள்ள இது, முத்தையாலு நாயக்கர் காலத்தில் கட்டப் பெற்றதாகும்(1540 – 1550 CE) அவரால் வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
செஞ்சிக் கோட்டையில் கோயில்களும். குளங்களும். மேடைப் பகுதிகளும் மற்றும் கல்யாண மகால். நாட்டிய சாலை, தர்பார் மண்டபம், மசூதி ஆகிய கட்டடப் பகுதிகளும் அமைந்துள்ளன.
வைணவக் கோயில்கள்
கோட்டைப் பகுதியில் அரங்கநாதர் கோயில், வேணுகோபால சாமி கோவில், வெங்கடரமணசாமி கோவில், பட்டாபி இராமசாமி கோவில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பிரதானமானது வெங்கடரமணசாமி கோவில் ஆகும்
வெங்கடரமணசாமி கோவில்
கீழ்க்கோட்டையில் சிதைந்த நிலையில் இக்கோவில் காணப்படுகிறது. இக்கோவில் முத்தையாலு நாயக்கன் காலத்தில் கட்டப்பெற்றதாகும். பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் போது, டூப்ளக்ஸ் Governor Dupleix.[2][1] சிலையின் பீடத்தை அமைப்பதற்காக இக்கோயிலிலிருந்து உயர்ந்த ஒற்றைத் தூண்களை பாண்டிச்சேரிக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிகிறது.
இக்கோயிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கருங்கற்களைக் கொண்டு மேல் சித்தாமூரிலுள்ள தேர்முட்டு கட்டப்பெற்றுள்ளது. கி.பி.1860ல் சென்னை மாகாணப் பணியில் பணிபுரிந்த ஸ்ரீ பாலையா என்ற சமண சமயத்தைச் சார்ந்த அலுவலர் செஞ்சியிலிருந்து கருங்கல் துண்டுகளை மேல்சித்தாமூருக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவற்றுள் கருங்கல் யானை முக்கியமானதாகும்.
இது தற்பொழுது மேல்சித்தாமூரிலுள்ள தேர்முட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
வெங்கடரமணசாமி கோவில் இராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கின்ற சிற்பங்களும், விஷ்ணுவின் அவதாரங்களும், புராணக் காட்சிகளும் புடைச் சிற்ப வரிசையில் நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் வடிக்கப்பட்டுள்ளன. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையும் காட்சியும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
கட்டிடக்கலை
இந்த கோவில் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பெரியகோவிலின் கட்டிட அமைப்பாகும்.இராமாயண காட்சிகள்,விஷ்ணு அவதாரம் மற்றும் சதுர மந்தனின் புராணங்களைச் சித்தரிக்கும் வண்ணம் நுழைவாயிலின் இரு பக்கமும் பிரமாண்டமான சிற்பங்கள் காணப்படுகிறது,