விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுகவில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வசம் இருந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அந்த பொறுப்பு அமைச்சர் பொன்முடி ஆதரவாளரான விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகருக்கு வழங்கப்பட்டது.இதனால் செஞ்சி மஸ்தான் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பதவிக்கு திமுக தலைமை தேர்தல் அறிவித்தது. ஆனால், அதங்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் வேறு யாரும் எதிர்த்து களமிறங்ககாத நிலையில், செஞ்சி மஸ்தான் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.