திருவனந்தபுரம்
கேரளாவில் பிஸ்கட் பாக்கெட் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலம் தண்பட்டில் இருந்து ஆலப்புழா வந்த ஆலப்புழா-தண்பட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர்
அந்த ரயிலின் சாதாரண வகுப்பு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 22 பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்தன.
ரயிவ்லே காவல்துறையினர் அதை சோதனை செய்துபிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையினர் 22 பிஸ்கெட் பாக்கெட்டுகளில் இருந்து மொத்தம் 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
பிஸ்கெட் பாக்கெட்டுகளில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.