GHANA BANS CREAMS
ஆகஸ்ட் மாதத்திலிருந்து தோல் வெளுக்கும் மூலப்பொருள் ஹைட்ரோகுவினோன் உள்ள எந்த வகையான ஒப்பனை பொருட்களின் விற்பனைக்கும் கானா நாட்டின் உணவு மற்றும் ஒளடதங்கள் ஆணையம் தடை விதித்துள்ளது.ஹைட்ரோகுவினோன் புற்றுநோய் ஏற்படுத்தும் சாத்தியத்தை கொண்டுள்ளது, அதனால் கானா அதைக் கொண்டுள்ள பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது.

மக்களை ஏமாற்றும் விளம்பரம்

உணவு மற்றும் ஒளடதங்கள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் லார்டே கானா ஸ்டார் என்ற பத்திரிக்கைக்குக் கூறுகையில், “சரும வெளுப்பு பொருட்கள் பற்றி ஆகஸ்ட் 2016 ல் இருந்து, ஐதரோகுவினோ கொண்ட அனைத்து பொருட்களும் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி வருகிறோம். 2016 ல் இருந்து, சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களின் ஏற்பு பூஜ்யமாக இருக்கப் போகிறது. “

கானாவில் உள்ள சுமார் 30% பெண்கள் ஃபேர் & லவ்லி போன்ற சரும வெளுப்பு பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், என்று அறிக்கைகள், ஆனால் நைஜீரியா (77%) மற்றும் செனகல் (52-67%) போன்ற ஆப்பிரிக்க நாடுகளைவிட விகிதங்கள் அதிகமாக உள்ளதாக டேஸ்டு அறிக்கைத் தெரிவிக்கிறது.

 
 

பெண்களை இன்னும் அழகாகக் காட்ட வேண்டும் என்பதற்காகச் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்கப்படும் இடமான இந்தியாவில், அழகான வெள்ளைத் தோல் என்ற கருத்து ஒன்றும் அசாதாரணமான விஷயம் அல்ல, ஆனால் இது வெண்மையான சருமம் தான் அழகிற்கும் வெற்றிக்கும் காரணம் என்ற எண்ணத்திற்கு வழிவகுக்கிறது. இது பல சமயங்களில் இன வெறிக்கும் காரணமாக உள்ளது.

நுகர்வோருக்குத் தீங்கு மட்டுமே செய்யக்கொடிய சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களுக்குத் தடைவிதித்த கானாவிற்கு நமது பாராட்டுக்கள்.

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி தயாராகிவிட்டது.