சிகப்பழகைத் தருவதாக சொல்லி விற்கப்படும் க்ரீம்களில் தோல் புற்றுநோயை உண்டாக்கும் ஹைட்ரோகுயினைன் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கானா நாட்டில் இந்த மாதத்திலிருந்து ஹைட்ரோகுயினைன் கலந்துள்ள சிகப்பழகு கிரீம்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ghana
ஹைட்ரோகுயினைன் கலந்துள்ள சிகப்பழகு க்ரீம்களுக்கு ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடும்போது கானாவில் மிக குறைந்த விகிதத்தில் மட்டுமே சிகப்பழகு க்ரீம்களை பயன்படுத்தும் பெண்கள் இருக்கிறார்கள் என்றாலும் மக்கள் நலன் கருதி கானா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெள்ளையர்கள் ஆண்டு விட்டுச்சென்ற அத்தனை காலணி நாடுகளின் மக்களிடத்திலும் வெண்ணிறம்தான் அழகு, உயர்வு என்ற மோசமான உளவியல் வேரூன்றியிருக்கிறது. பல தலைமுறைகள் கடந்தும் இந்த எண்ணம் மட்டும் மாறவேயில்லை. கருப்பும் அழகுதான் என்ற உண்மையை உணர்வதே இது போன்ற தவறான, ஊறு விளைவிக்கும் நுகர்வு பொருட்கள் சந்தையில் நுழைவதை தடைசெய்யும்.