தென்மேற்கு சீனாவில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. எனவே சூய்னிங் என்ற இடத்தில் ஒரு பொழுதுபோக்கு மையத்தால் 10,000 சதுர மீட்டரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உப்புக்கடலில் சென்று குளிப்பதை அப்பகுதி மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.
china
மத்தியக் கிழக்கில் உள்ள சவக்கடலைப்போலவே இந்த பிரம்மாண்ட நீச்சல்குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே இப்பகுதியில் உள்ள தண்ணீரில் 22% உப்பு கலந்துள்ளதால் இத்தண்ணீர் மிகவும் அடர்த்தியாக காணப்பட்டு மிதக்கும் அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கும். கடந்த வாரத்தில் ஒருநாள் வெயிலின் உக்கிரம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டவே மக்கள் இந்த செயற்கை சவக்கடலுக்கு படையெடுக்கத் துவங்கினர். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 6000 பேர் அங்கு நீச்சலடித்து வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.