பெர்லின்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புக்காகச் சீனா 13000 கோடி யூரோ அளிக்க வேண்டும் என ஜெர்மனி பில் அனுப்பி உள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது. இது அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுதலைச் சீனா கட்டுப்படுத்தாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த வைரஸை உருவாக்கியதே சீனாதான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. கொரோனாவின் தாக்கம் தெரிந்தே இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வராததற்கு உரிய விளைவுகளைச் சீனா விரைவில் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைப் போலவே இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் சீனாவின் மீது கோபமாக உள்ளன.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் செய்தித்தாள் கொரோனா வைரஸால் அந்நாட்டுக்கு 13000 கோடி யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டிருந்தது. ஜெர்மன் அரசு அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜெர்மன் அரசு இந்த இழப்புக்கான விலையாக 13000 கோடி யூரோவை சீன அரசு அளிக்க வேண்டும் என பில் ஒன்றை அனுப்பி உள்ளது. இது சீன அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.