பெர்லின்: தனது பாதுகாவலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாதுகாவலர் அதிபருடன் நெருங்கிய தொடர்புள்ளவர் என்று கூறப்படுகிறது. ஜெர்மன் அதிபரும் கோவிட்-19 பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதேசமயம் இன்னும் முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து, கடந்த 24 மணிநேரத்தில்தான் மிக அதிகளவாக 7830 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 18ம் தேதியன்று ஃபிரான்க்பர்ட் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியில், ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மேயர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.