சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இங்குள்ள ஜெர்மன் நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனி விமானம் மூலம் ஜெர்மன் தலைநகர் ஃபிராங்புர்ட் புறப்பட்டனர்.

சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் அவர்களை இந்திய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் அடைந்த சென்னையில் இருந்த  ஜெர்மன் தூதரக அதிகாரிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினர். இது தொடர்பாக இந்திய அரசிடம்பேசி வந்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இந்திய வெளியுறவுத்துறை அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக ஏர் இந்தியாவின் தனி விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதற்கிடையில், தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 159 பேர், மருத்துவ பரிசோதனை செய்யப்ப்டடனர். அதன்பிறகு அவர்கள்   தனி விமானத்தில் ஏற்றப்பட்டு, பிராங்க்பேர்ட்  நகருக்கு  புறப்பட்டு   சென்றனர்.