நியூஸ்பாண்ட்
இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி. எஸ். தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அளித்தது.
சசிகலா இதற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பதவிக்கு வருவதற்குத்தானே அவரும், அவரது குடும்பத்தினரும் பகீரத முயற்சி எடுத்து வந்தனர்?
ஆகவே பொ.செ. வாக என்று பதவியேற்பார் என்பதுதான் கேள்வி.
இதற்கு பதிலாக, “வரும் ஜனவரி 2ம் தேதி பொ.செ.வாக பதவியேற்பார்” என்று   சில தகவல்கள் வந்தன. ஆனால், “சசிகலா வரும் டிசம்பர் 31ம் தேதியே அதாவது நாளை மறுநாளே பொ.செ.வாக பதவியேற்பார்” என்று  தகவல்கள் அதிமுக வட்டராத்தில் இருந்து கசிகின்றன..