டில்லி

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இந்திய விற்பனையை இந்த வருட இறுதிக்குள் முடித்துக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.

இதனால் அதன் விற்பனையாளர்கள் இழப்புத்தொகைக்காக சுமுக முடிவு கிடைக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 96 விற்பனையாளர்களும், அவர்களுக்கு 140 ஷோ ரூம்களும் உள்ளன.

இவைகள் மூடப்படுமாயின் சுமார் 9500 பேருக்கு வேலை பறிபோகும்.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் சேவை கிடைக்காத காரணத்தால் துன்புறுவார்கள்.

அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் முதலில் தற்போதுள்ள வாகன மாடல்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு பின் புதிய மாடல்கள் அறிமுகப் படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

பின்பு தனது கம்பெனி முழுவதுமாக இந்தியாவை விட்டு வெளியேறும் என அறிவித்து விட்டது.

நிறுவனம் தரும் ஈட்டுத்தொகை, மிகவும் குறைவாக உள்ளதால் விற்பனையாளர்கள். மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நிறுவனம் அறிவித்திருக்கும் 12% என்பது, ரூ.ஆறு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப் படும் ஒரு கடைக்கு ஈடாக வெறும் ரூ.70 லட்சம் மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும்.

எப்படியும் டிசம்பர் 31க்குள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவதால், அதற்குள் சரியான தீர்வு ஏற்படாவிடில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர விற்பனையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியுள்ளது.

சேவை மையம் அமைக்கும் விற்பனையாளர்களுக்கு அனைத்து உதவியும் நிறுவனம் அளிக்கும்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் நமது நாட்டில் உள்ளது.

குஜராத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டது.

விற்பனை ஆகாத வாகனங்க்ளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முனைப்பில் உள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.