டெல்லி: நாடு முழுவதும உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
உயர்கல்வி மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு பொதுநுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்து வருகிறது. ஏற்கனவே மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதேபோல விரைவில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் மத்திய அரசு நுழைவுத் தேர்வை கொண்டு வர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
அதன்படி நடப்பாண்டில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட் உள்ளதாகவும், முதுகலை, முனைவர் படிப்புகளில் சேர தனித்தனியாகவே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த தேர்வானது சுமார் 3 மணி நேரம் நடைபெறும் என்றும், அது திறனறித் தேர்வாக இருக்கும் என்றவர், வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.,