டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே இன்று பதவி ஏற்றார். இவர் நாட்டின் 29வது ராணுவ தளபதி என்ற பெருமைக்குரியயவராகி உள்ளார்.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பனி ஒய்வு பெறுகிறார் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே  நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, புதிய ராணுவ தலைமை தளபதியாக  இன்று பொறுப்பேற்றார். இந்நிலையில், ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக பி.எஸ். ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். அவர் நாளை (மே 1-ஆம் தேதி) பொறுப்பேற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே நாளை பதவியேற்கிறார். இவர் 1982- தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தவர். இவர் இந்திய ராணுவ மேற்கு பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான் நிகோபார் பிராந்தியத்திலும் பணியாற்றியுள்ளார்.  இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982 ஆம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். கடந்த காலம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பல்லன்வாலா செக்டரில் ஆப்ரேஷன் பராக்ரம் நடத்தப்பட்ட போது பொறியாளர் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர் தான் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே. 2001 நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கை பராக்ரமில் நாட்டில் மேற்கு எல்லையில் பெரிய அளவிலான படைகள் மற்றும் ஆயுதங்களை இந்திய ராணுவம் அணிதிரட்டியது.

ஜெனரல் பாண்டே தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில், பொறியாளர் படைப்பிரிவுக்கும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள காலாட்படைப் படைப்பிரிவுக்கும், லடாக் செக்டாரில் ஒரு மலைப் பிரிவுக்கும், வடகிழக்கில் ஒரு படைப்பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார். தற்போது ராணுவத்தில் கிழக்கு பிரிவுக்கு பாண்டே தலைவராக உள்ள நிலையில், இதற்கு முன் அவர் அந்தமான் நிக்கோபார் படைப் பிரிவில் தளபதியாக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்வுபெறும் மனோஜ் முகுந்த் நரவனே  முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.