புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.6 என்ற அளவில் குறைந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.1% என்பதிலிருந்து குறைந்து 7% என்பதாக மதிப்பிடப்பட்டது.
ஆனால், அதன்பிறகு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்ட வளர்ச்சி விகிதம், 7% என்பதிலிருந்து 6.6% என்பதாக குறைந்துவிட்டது.
புள்ளிவிபர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து இந்த விபரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
அதேசமயம், சீனாவோடு ஒப்பிடுகையில், இந்த வளர்ச்சி விகிதம் அதிகம்தான் என்றும் கூறப்படுகிறது.