
விஜய் டிவியில் கடந்த 77 நாட்களாக ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.
நேற்று (செப்டம்பர் 8) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், சேரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சேரனின் வெளியேற்றத்துக்காக லாஸ்லியா மற்றும் வனிதாவும் அழுதது நடிகையும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏற்கெனவே கலந்து கொண்டவருமான காயத்ரி ரகுராம் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
“கண்ணீர் வராமல் அழுவது எப்படி என நான் கற்றுக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த திறமை. சத்தமும் ஆக்ஷனும் இருந்ததே தவிர, கண்ணீர் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
Patrikai.com official YouTube Channel