சென்னை
துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியீடு தாமதம் ஆவது குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்துள்ளார்.
கவுதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம் படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள ‘டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ என்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படம் பற்றி கேள்வி எழுப்பினர்.
கவுதம் வாசுதேவ் மேனன்,
”துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் சூழ்நிலையில் இருக்கும்போ11து யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை. தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லிங்குசாமி ஆகிய இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. தாமதத்திற்கு இதுதான் காரணம்,”
என்று பதிலளித்துள்ளார்.