நெட்பிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆன்தாலஜி வெப்சீரிஸில் வான்மகள் என்ற எபிசோடை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் மற்றொரு ஆன்தாலஜி வெப்சீரிஸாக தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் நவரசா உருவாகி வருகிறது.

நடிகராகவும் சில திரைப்படங்களில் தோன்றும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் R.J.பாலாஜி இணைந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

R.J.பாலாஜி போல கௌதம் வாசுதேவ மேனன் கிரிக்கெட் கமென்ட்ரி செய்யும் வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CQsw2w_jTrG/