மலையாளத்தில் இந்த வருடம் வெளியான திரைப்படம் நாயாட்டு. இதன் தமிழ் ரீமேக்கை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.

இதில் தலித்களை தவறாக சித்தரித்திருப்பதாக தமிழகத்தில் (கேரளாவில் அல்ல) சின்ன சலசலப்பு உருவானது. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட சர்வைவல் த்ரில்லர் திரைப்படமாக நாயாட்டு பாராட்டப்பட்டது.

நாயாட்டு தமிழ் ரீமேக் உரிமை ஐசரி கணேஷுக்கு கிடைத்தால் கௌதம் ரீமேக்கை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்த உரிமை யார்வசம் செல்லப்போகிறது என்பது தெரிந்துவிடும்.

நாயாட்டுக்கு முன்பு மார்டின் ப்ரக்கட் இயக்கிய படம் சார்லி. இதை மாறா என்ற பெயரில் தமிழில் மாதவன் நடிப்பில் ரீமேக் செய்தனர். நாயாட்டு படத்தின் தெலுங்கு உரிமையை அல்லு அரவிந்தும், இந்தி உரிமையை ஜான் ஆபிரஹாமும் வாங்கியுள்ளனர். தமிழில் ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பெரும் தொகைக்கு உரிமையை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]