டில்லி:

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாரதிய ஜனதா கட்சி சார்பில்  நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது உறுதியாகும் என நம்பத்தகுந்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக காம்பீர் பிரசாரம் (பைல் படம்)

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் மறக்க முடியாதவர் முன்னாள் கிரிக்கெட் கவுதம் காம்பீர். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கப்பட்ட நிலையில்,  ஐபிஎல் மற்றும் உள்ளூர்  போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக  அறிவித்தார்.

இந்த நிலையில் கவுதம் காம்பீர், டில்லியில் ஜக சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே  புதுடெல்லி பாராளுமன்ற தொகுதியாக உள்ள பாஜக எம்.பி.மீனாட்சி லேஹி, தற்போது வேறு தொகுதிக்கு மாற இருப்பதாகவும், புதுடெல்லி தொகுதி  கவுதம் காம்பீருக்கு  வழங்கப்பட உள்ளதாகவும் டில்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவுதம் காம்பீர்,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.