திருவண்ணாமலை:
னுமதியின்றி செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் நிரம்பும் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
gas1
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த எரிவாயு நிரப்பும் குடோனில் சிலிண்டர் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரிவலை பாதையில் உள்ள கோசலை கிராமத்தில் வீடு ஒன்றில் அனுமதியின்றி காலி சிலிண்டர் எரிவாயு நிரப்பும் குடோன் செயல்பட்டு வந்துள்ளது.\
அங்கு பெரிய சிலிண்டரில் இருந்து கேஸ் சிறிய சிலிண்டருக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்ததது. சம்பவத்தன்று கேஸ் மாற்றும்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் வீட்டின் மேற்க்கூரை உடைந்தது. இதில் சிக்கி குடோனின் உரிமையாளர் உமாபதி மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் தகவல் அறிந்த வட்டாச்சியர் பன்னீர்செல்வம் அவரிடம் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி குடோன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதையடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 15க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.