சென்னை:

கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவால், சென்னையில்  கடந்த 7 நாட்களாக குப்பையின் அளவு குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி பெருமிதமாக தெரிவித்து உள்ளது.

குப்பையை நாம், வெறும் வேஸ்டாக மட்டுமே நினைக்கிறோம்.. ஆனால், அந்த குப்பைகளின் மூலம் ஒருதரப்பு கோடி கோடியாய் கல்லா கட்டி வருவது எத்தனை பேருக்கு தெரியும்..

சென்னை போன்ற பெருநகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள்  கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க உதவும் வைரச்சுரங்கமாக மாறி உள்ளது. இதற்கு சாட்சி  கும்பை ஏலம் எடுக்க நடைபெறும் போட்டிகளே…

சென்னை மாநகராட்சியில் சில மண்டலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன. பல மண்டலங்களை மாநகராட்சியே நிர்வகித்து வருகிறது. இங்குள்ள ஒரு மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 டன் முதல் 250 டன்கள் குப்பைகள் அள்ளப்பட்டு வந்தன.

ஆனால்,கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில் கடந்த  7 நாட்களாக குப்பையின் அளவு குறைந்துள்ளதாகவும், வழக்கைத்தை விட பெருமளவு குப்பைகள்  குறைந்துள்ளதாக  சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதை மாநகராட்சி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளதா அல்லது பெருமிதமாக தெரிவித்து உள்ளதா என்பது தெரியவில்லை..