கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும் மற்றும் கொரோனா பயத்தை விரட்ட வேண்டும் என்று பேசியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் இன்று கோவாவில் துவங்குகிறது. மொத்தம் 4 மாதங்கள் நடைபெறும் இத்தொடர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, “ஐஎஸ்எல் என்பது இந்திய கால்பந்தின் ஒரு சிறந்த அடையாளம்.

கொரோனா தளர்வுக்குப் பிறகு, இத்தொடர் மீண்டும் துவங்குவது சிறப்பானது. அனைவருமே இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமென விரும்புகின்றனர். ஏனெனில், கொரோனா முடக்கத்தால் மக்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்.

வெளியில் சென்றால் பாதுகாப்பில்லை என்ற சூழலைப் போக்க வேண்டும். பயத்தை விரட்ட வேண்டம். ஐஎஸ்எல் தொடர் மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும். இதனையடுத்து, 2021 ஜனவரி முதல், மொத்தம் 38 உள்நாட்டு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை துவக்கவுள்ளோம்” என்றார்.