பிரக்யராஜ்:

கில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, இன்று தனது படகு பிரசாரப் பயணத்தை தொடங்கினார்.

‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் பிரியங்கா காந்தி 3 நாட்கள் கங்கை கரையில் வசிக்கும் மக்களிடம்  படகு மூலம் சென்று  பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று தனது படகு பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவை திரட்டும் வகையில்  கங்கை நதியில் படகுகள் மூலம் 3 நாட்கள் பிரசாரம் செய்து மக்களிடம் ஓட்டு வேட்டையாடுகிறார் பிரியங்கா காந்தி.

இன்று  பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தனது படகு பிரசாரத்தை தொடங்கி உள்ள பிரியங்கா சுமார்  140 கி.மீ. தூரம் படகில் பயணித்து வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார்.

இந்த பயணத்தின்போது பிரியங்காவுடன் அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் செல்கிறார்கள்.

பிரியங்காவின் இந்த படகு பிரசாரத்திற்கு  ‘கங்கா யாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]