பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்து வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் படம் ‘பிகில்’.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் ‘பிகில்” படத்தின் பாடல் வெளியீட்டுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. மிகப்பிரமாண்ட ஏற்பாடுகளுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் 15 அல்லது 22 தேதியில் நடைபெறும் என எதிப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. அதில் “பிகில்” படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.