சென்னை:  விநாயகர் சதுர்த்தி விடுமுறைதினம் என்பதால் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும்  விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, மத்திய மாநில அரசுகள் விடுமுறை. இதனால், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால்,   இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை கால அட்டவணை இன்று பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.