தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவுநாளையொட்டி, கஜகஸ்தான் நாட்டில் அலமாட்டி நகரில் உள்ள காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவு நாள் இன்று இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அகிம்சையை போதித்த மகான் காந்திக்கு இந்தியா மட்டு மின்றி, உலகின் பல நாடுகளில் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கஜகஸ்தான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்திய தூதர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, கஜகஸ்தானின் அலமாதியில் அமைந்துள்ள மகாத்மாவின் சிலைக்க இசை அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இந்திய தூதர் பிரபாத்குமார் தலைமையில், இந்திய வம்சா வழியினர் மரியாதை செய்தனர். அப்போது, மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்ட பள்ளி எண் 92 மாணவர்களின் மகாத்மா காந்தி குறித்து வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.