ர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்.ஜி. சாலையில் மகாத்மா காந்தியின் சிலைக்கு பக்கத்தில் மதுபான கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அங்குள்ள வழக்கறிஞர் அமர்நாதன் என்பவர், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘’ வழிபாட்டு தலங்கள் அருகே மதுபான கடைகள் திறக்க அனுமதி கிடையாது’ என கர்நாடக கலால் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அனுமதி கொடுத்துள்ள மதுபான கடை, காந்தி சிலையில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த ஏராளமானோர் தினமும் வருகிறார்கள்.

காந்தி சிலை, வழிபாட்டு தலத்துக்கு ஒப்பானது . எனவே அங்கு மதுபான கடை வைக்க கூடாது’’ என அந்த மனுவில் தெரிவித்திருந்தார் வழக்கறிஞர். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.

’’மகாத்மா காந்தி சிலை, வழிபாட்டு தலம் அல்ல’’என கூறி அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

-பா.பாரதி.